புத்தளம் மாவட்ட சாகித்திய விழா
11-11-2016 03:39 PM
Comments - 0       Views - 36

புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட கலாசார ஒன்றியம் என்பனவற்றின் ஏற்பாட்டில், புத்தளம் மாவட்ட சாகித்திய  விழா  நேற்று வியாழக்கிழமை, புத்தளம் நகர மண்டபத்தில் ஆரம்பமானது.

புத்தளம் மாவட்ட  உதவி அரசாங்க அதிபர் எம்.சீ.கே.வன்னிநாயக்க தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், புத்தளம் உதவி பிரதேச செயலாளர் சம்பத் வீரசிங்க உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

முதல்நாள் நிகழ்வில் தமிழ்மொழி இலக்கிய ஆய்வுரைகள் மற்றும் தொல்பொருள், ஆயுர்வேதம், விவசாயம், உட்பட பல்துறை சார்ந்த விற்பனை மற்றும் கண்காட்சிகூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

"புத்தளம் மாவட்ட சாகித்திய விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty