மங்களராம தேரரின் அடாவடித்தனம்
14-11-2016 12:48 PM
Comments - 1       Views - 336

மடக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் கெவிளியாமடுப் பகுதியில் அம்பாறை - கண்டி பிரதான வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11), பட்டிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் காரியாலய அலுவலர்கள் சென்றபோது, மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்குவான அம்பிட்டிய சுமரணத்தின தேரர், பிரதேச செயலாளருக்கும் கிராமசேவை அதிகாரிக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால், தமிழர்கள் புலிகள் எனவும் பறத் தமிழன் எனவும் தூசண வாரத்தைகளால்  திட்டித்தீர்த்தார்.

சம்பந்தப்பட்ட புத்தபிக்கு, அத்துமீறிக் காணி அபகரிப்புச் செய்வதைத் தடுக்கும் விதத்தில் நேரடியாகப் பார்வையிட  பிரதேச செயலாளரும் காரியாலய உத்தியோகத்தர்களும் அங்கு சென்றபோதே, மிகவும் கீழ்தரமான முறையில் குறித்த புத்தபிக்கு, இவ்வாறு தமிழ் இனத்தை இம்சித்துள்ளார்.

(ஒளிப்பதிவு : ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

"மங்களராம தேரரின் அடாவடித்தனம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
P.Shanmugam 16-11-2016 03:58 AM
Immediately government take action against him . He is creating a problem with Both parties.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty