சம்பியனானது தேற்றாதீவு உதயம்
18-11-2016 07:08 PM
Comments - 0       Views - 25

- வடிவேல் சக்திவேல்

களுவாஞ்சிக்குடி மக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது, களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்றது.

40 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றிய இந்த மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்தாடிய தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக் கழகம், வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்து 20,000 ரூபாய் பணப் பரிசிலினையும், வெற்றிக் கேடயத்தையும் பெற்றுக் கொண்டது.  
இரண்டாமிடத்தினை,  ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டதுடன் 10,000 ரூபாய் பணப் பரிசிலினையும், வெற்றி கேடயத்தையும் பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு உதயம் விளையாட்டுக் கழக வீரர் டினோசன், தொடர் நாயகன் விருதினைத் தட்டிச் சென்றதோடு,  5,000 ரூபாய் பரிசிலினையும் வெற்றி கேடயத்தையும் பெற்றுக் கொண்டார். சிறந்த பந்து வீச்சாளராக மக்ஸ் விளையாட்டுக் கழக வீரர் சம்பவான் தெரிவு செய்ய பட்டதோடு, 2,500 ரூபாய் பணப் பரிசிலையும் வெற்றி கேடயத்தையும் பெற்று கொண்டார்.   

"சம்பியனானது தேற்றாதீவு உதயம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty