பாடசாலை மாணவன் மீது நடுவீதியில் தாக்குதல் (VIDEO)
23-11-2016 10:34 AM
Comments - 0       Views - 633

கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு முன்பாக சிலரால் பாடசாலை மாணவன், கண்டபடி தாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பான வீடி​யோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

“சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சமூகம் பதில் சொல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. அது சரியான முறையில் செயற்படுத்தப்படாவிட்டால்  சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுவிடும்” என தேசிய சிறுவர் அதிகார சபையின் முன்னாள் தலைவரான  ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

கண்டியிலுள்ள பிரபல பாடசாலை மாணவன் மீது அப்பாடசாலைக்கு முன்னால் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நிறைவடைந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் போது, பெற்றோர், பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்கள் குறித்த இடத்தில் இருந்தும், மாணவனை அடிப்பதை தடுக்காமல் செல்வதை வீடியோவில் காண முடிகின்றது.

இந்த தாக்குதல் திங்கட்கிழமை(21) இடம்பெற்றுள்ளதுடன் நேற்றைய தினததிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

"பாடசாலை மாணவன் மீது நடுவீதியில் தாக்குதல் (VIDEO)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty