2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாஹிராவின் பழைய மாணவர்கள் வென்றனர்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 23 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் குழுவான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் அணிக்கும், மாஹோ லிவோ கால்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில், 3-2 என்ற கோல் கணக்கில் புத்தளம் மைலோ கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியானது, மாஹோ பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. புத்தளம் அணிக்காக எம். முஸ்தாக், எம்.ரஸ்மி, ஏ.ஆர்.எம். அர்ஹம் ஆகியோர் கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த புத்தளம் மைலோ கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் அணியானது காலத்தால் அழிந்து போகாத அணி என்று வர்ணிக்கலாம். இந்த அணியில் தற்போது விளையாடும் வீரர்கள் இளம் குடும்பஸ்தர்களாக  ஆகிவிட்டாலும் கூட  தாம் பாடசாலை பருவத்தில் பாடசாலை அணிக்காக விளையாடிய அந்த இனிமையான  நினைவுகளை சுமந்தவர்களாக இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து விடாமல் அதே பெயரில் ஒரே அணியில் விளையாடுவது வரலாற்றுச் சாதனையாகும்.

இவர்கள், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில், அகில இலங்கை ரீதியாக   நடாத்தப்பட்ட மைலோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், 12 வயதுக்குட்பட்ட போட்டியிலும், 14 வயதுக்குட்பட்ட போட்டியிலும் 1996, 1997, 1998, 1999ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சம்பியன்களாகி சாதித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் அன்று படைத்த இந்த தொடர் சாதனை இதுவரையும் எந்த  அணிகளாலும் முறியடிக்க முடியாத சாதனையாகவே இன்றும் கருதப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்த அணிக்கு அன்று பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி இந்த அணி சாதனைகள் படைக்க காரணகர்த்தாவாக இருந்த சாஹிரா தேசிய கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எம்.முபாரக் இன்று ஓய்வு பெற்ற நிலையில் இந்த அணிக்கு இன்றும் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

"பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும், கற்ற பாடசாலையும், கற்பித்த ஆசானும், நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்கின்ற வாசகம்  இந்த கால்பந்தாட்ட அணிக்கு வலு சேர்க்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .