வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்டவர்களுக்கு அபராதம்
28-11-2016 03:01 PM
Comments - 0       Views - 15

-கனகராசா சரவணன்

இலங்கையிலிருந்து டுபாய்க்குச் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டைகளைக் கடத்தில் செல்ல முற்பட்ட இருவருக்கு, இன்று திங்கட்கிழமை, 3 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு, தெஹிவளையைச் சேர்ந்த பெண்ணொருவரும் குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், ஒன்றிணைந்து சம்பவதினமான இன்று (28) காலையில் டுபாய்க்குச் செல்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில், அவர்களின் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 கிலோகிராம் வல்லப்பட்டைகள்  கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் ஆணுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, வல்லப்பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

"வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்டவர்களுக்கு அபராதம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty