2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹொரணையில் Ceylinco Life புதிய கிளை

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணையில் நிறுவப்பட்ட அதன் புதிய கிளையை Ceylinco Life சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளது. 

5,870 சதுர அடி பரப்பளவைக் கொண்ட புதிய இரண்டு மாடிக் கட்டடம் ஹொரணை, பாணந்துறை வீதியில் உள்ள கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. 4 மாடிகளாக விஸ்தரிக்கக் கூடிய வசதிகளுடன் உச்ச பயன் விளைவாக இயற்கை வெளிச்சத்தையும் உள்ளடக்கும் வகையில், முற்றும் சூரிய சக்தி பொருத்தப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன எரிசக்தி சிக்கனமான ஒளி வசதி, வளிச்சீராக்கி வசதி, மழை நீரை சேமித்து வைக்கும் வசதி ஆகியனவும் இக்கிளையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுற்றாடல் சாதகமான எரிசக்திக்கு இயன்ற அளவு அதிகமான கிளைகளை மாற்றுவது என்ற நிறுவனத்தின் படிப்படியாக வளர்ந்து வரும் திட்டத்தின் ஒர் பகுதியாக அண்மையிலும் பாணந்துறையில் இதேபோன்று வடிவமைக்கப்பட்ட இதிலிருந்து பெரிய கட்டடம் ஒன்றை Ceylinco Life திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புதிய சுற்றாடல் சாதகமான மாதிரிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட Ceylinco Lifeஇன் கிளைக் கட்டடங்கள் வென்னப்புவ, திருகோணமலை, பண்டாரவளை, பாணந்துறை, ஹொரணை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. அநுராதாபுரம், யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு, களுத்துறை, குருநாகல், கம்பஹா, காலி, மாத்தறை, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொட்டாஞ்சேனை, கல்கிஸை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கிளைகள் கம்பனியின் சொந்தக் காணிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் சில சூரிய சக்தி முறைமைக்கு மாற்றப்பட்டுள்ளன. 

கொழும்பு 05 ஹெவ்லக் வீதியில் அமைந்துள்ள Ceylinco Lifeஇன் தலைமை அலுவலகமும்  13.7 மில்லியன் ரூபாயை முதலீடு செய்து 63.18 கிலோ வொட் எரிசக்தியை உற்பத்தி செய்யக் கூடிய பாரிய சூரிய எரிசக்தி திட்டத்தை அமுல் செய்து சுற்றாடல் சாதகமான நடவடிக்கைகளில் சாதனையை நிலைநாட்டியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .