2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்வு, நேற்றுப் புதன்கிழமை (30) நடைபெற்றது.

ஜப்பானிய நிதி உதவியுடன் முகமாலை முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதியில் இரு தரப்பினராலும் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை டாஸ் மனித நேய கண்ணிவெடி அகற்றம் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் டாஸ் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கும் ஜப்பானிய உயர்ஸ்தானிக குழுவினர், டாஸ் நிறுவன உயரதிகாரிகள், கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், கண்ணிவெடி அகற்றம் செயற்பாடு தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .