2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீருடை வவுச்சரில் மோசடி: அதிபர் பணி நீக்கம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, பதியூதின் மஹமூத் மகளிர் கல்லூரியின் அதிபர், நேற்று 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு, கல்லூரியின் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சர்களை, மாணவிகளுக்கு வழங்காமல் தனிப்பட்ட ஒரு நிறுவனம் மூலம்  சீருடைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி  தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டுடில்,  மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில், இதுதொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்விதிகளை கடைப்பிடிக்காமையே, இவரது பணி நீக்கத்துக்கு முக்கிய காரணம் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X