2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யதன்சைட் தோட்டக் குடியிருப்புக் கூரைகளை மாற்ற நடவடிக்கை

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

கொட்டகலை யதன்சைட் தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்புக்களின் கூரை தகரங்களை மாற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தோட்டத்திலுள்ள குடியிருப்புகளில் கூரைத்தகரங்கள் நீண்டகாலமாக, மாற்றப்படாமல் இருப்பதால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்,  மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இங்குள்ள குடியிருப்புக்களின் கூரைத்தகரங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

ஏனைய குடியிருப்புக்களின் கூரைத்தகரங்கள், அடுத்த வருட ஆரம்பத்தில் மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத்  தோட்டத்துக்கு  விஜயம் மேற்கொண், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச்செயலாளர் ராஜமாணிக்கம் , முக்கியஸ்தர் சோமசுந்தரம்,தோட்டத் தலைவர் செல்லையா ஆகியோர் , தோட்டத்தில் நிலவி வரும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .