வரலாற்றில் இன்று: டிசெம்பர் 02
02-12-2016 12:00 AM
Comments - 0       Views - 81

1409: ஜேர்மனியின் லீப்ஸிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1946: இந்திய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, பால்தேவ் சிங், மொஹமட் அலி ஜின்னாஹ், லியாகத் அலிகான் ஆகியோரை அரசியலமைப்புச் சபையின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்தது.

1954: தேசியவாத சீனாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

1961: தான் ஒரு மார்க்சிஸ லெனினிஸவாதியெனவும் கியூபா கம்யூனியஸத்தை பின்பற்றும் எனவும் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1971: அபுதாபி, அஜ்மன்,  புஜாரியா, சார்ஸா, துபாய், உம் அல்குவெய்ன் ஆகியன இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை உருவாக்கின.

1976: 1959ஆம் ஆண்டு முதல் கியூபாவின் பிரதமராக பதவி வகித்த பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியானார்.

1988: பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ பதவியேற்றார்.

1993: கொலம்பிய போதைப்பொருள் வர்த்தகப் புள்ளியான பாப்லோ எஸ்கோபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: தாய்லாந்து பிரதமர் சோம்சேய் வொங்சாவட் அரசியல் நெருக்கடி காரணமாக இராஜினாமா செய்தார்.

"வரலாற்றில் இன்று: டிசெம்பர் 02" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty