2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள்

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

இளைஞர் நாடாளுமன்றத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலிருந்து மூன்று உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தலுக்காக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்றன.

இதில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம். ஹனிபா, பொலிஸ் அதிகாரி எஸ். பகிரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளிலிருந்து தலா ஓர் உறுப்பினர் வீதம் மூன்று பேரைத் தெரிவுசெய்வதற்காக தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதற்காக 14 பிரதேச செயலகங்களிலும் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களிடமிருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. குறித்த மூன்று தொகுதிகளிலும் நடாத்தப்படும் தேர்தல் மூலம் ஒரே இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவாகும் இடத்து பாதிக்கப்பட்ட மற்றைய  இனத்தைச் சேர்ந்த அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஒருவருக்கு உறுப்பினராகும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் என்எல்எம் நைசப் நைறூஸ் தெரிவித்தார்.

இளைஞர் கழக உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X