அடுத்த ஐபோனில் வளைந்த திரை?
29-11-2016 06:09 PM
Comments - 0       Views - 12

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐபோன்களில், சம்சுங் நிறுவனத்தின் எட்ஜ் திறன்பேசிகள் போன்று வளைந்த திரைகளைக் கொண்டிருக்கும் ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய organic light emitting display (OLED) திரைகளின் உற்பத்தியை அதிகரிக்குமாறும், சம்சுங் நிறுவனத்தை விட தெளிவான முன்மாதிரியான திரைகளைத் தருமாறும் அப்பிள் கூறியுள்ளதாக, அப்பிளின் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும், பத்துக்கும் மேற்பட்ட முன்மாதிரித் திரைகளை அப்பிள் கருத்திற் கொள்வதாக தெரிவிக்கப்படுகையில், வளைந்த திரையுடன் கூடிய ஐபோன் சந்தைக்கு வராமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

வளைந்த திரையுடன் கூடிய ஐபோன் வருமென்று முன்னரும் கூறப்பட்டிருந்ததுடன், அப்பிள் அடுத்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன்களில் ஒன்றாவது OLED திரையைக் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டது.

இதுதவிர, அடுத்தாண்டு மூன்று ஐபோன் மாதிரிகளை அப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இரண்டு மாதிரிகள், 5.5 அங்குலம் கொண்டவையாக இருக்கும் என்பதுடன், திரையினால் வேறுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மூன்றாவது 4.7 அங்குலமுடையதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவற்றில், பெரிய திறன்பேசிகளில் இரட்டைக் கமெராக்கள் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அடுத்த ஐபோனில் வளைந்த திரை? " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty