கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 8 பேர் காயம்
03-12-2016 02:43 PM
Comments - 0       Views - 12

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் திறந்த பல்கலைக்கழகத்துக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் எட்டுப் பேர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நகரிலிருந்து கற்பிட்டி தளுவப் பிரதேத்தை நோக்கிச் சென்ற 'கென்டர்' வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த லொறியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், லொறியில்  பயணித்த 11 பேரில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளக புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 8 பேர் காயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty