ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேருக்கும் விளக்கமறியல்
04-12-2016 03:59 PM
Comments - 0       Views - 50

-எம்.இஸட்.ஷாஜஹான்

வீதி சட்ட வீதிகளை  மீறும் வாகன சாரதிகளுக்கு  அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள  25,000 ரூபாய் அபராதத் தொகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கல்கந்தப் பகுதியில் பிரதான வீதியை மறித்து  முச்சக்கர வண்டி சாரதிகள்,   வெள்ளிக்கிழமை மேற்கொண்ட  ஆர்பாட்டத்தையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட 19 பேரையும், எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல, நேற்று (04) உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களில் ஒருவர் கம்பஹா மாவட்ட தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் மதுரகே லெம்பர்ட் ஆவார்.

  நீதிமன்றத் தடையுத்தரவை மீறியமை,  பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை,  பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 16 முச்சக்கர வண்டிகள், லொறி, பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

திருகோணமலை, கோணவல, ரததொழுகமை, புசல்லாவ, சீதுவை, கொழும்பு, கட்டானை, பிட்டிபனை மற்றும் குரணை உட்பட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேருக்கும் விளக்கமறியல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty