2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அடைக்கலநாதனின் தந்தை காலமானார்

George   / 2016 டிசெம்பர் 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், செல்வம் அடைக்கலநாதனின் தந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று (4) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன் (வயது-83), திடீர் சுகவீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலை, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அவர் உயிரிழந்த செய்தியை, செல்வம் அடைக்கலநாதன், உறுதிப்படுத்தியுள்ளதோடு இறுதி கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

அடைக்கலநாதனின் தந்தையான அடைக்கலம் அமிர்தநாதன், சித்த வைத்தியர் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .