2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

The Body Shop Skin Defence அறிமுகம்

Gavitha   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் The Body Shopஇனால் “The Body Shop Skin Defence” எனும் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாவனையாளர்களின் சருமத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தயாரிப்பு அமைந்துள்ளது. பன்முக பாதுகாப்பு சேரத்தில், SPF 50 கொண்டுள்ளமையால், UVB பாதுகாப்பை வழங்கி சருமத்தை மோசமான புறக்காரணிகள் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது.  

நகர பகுதியைச் சேர்ந்த வேலைப்பளு நிறைந்த பெண்களின் சருமத்தை UVA/UVB கதிர்கள், வளி மாசு, வாயு குளிரூட்டி, கதிரியக்கம், வெப்பம் மற்றும் ஈரப்பதன் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. 30-45 வயதுக்குட்பட்ட 200 பெண்கள் மத்தியில் 2014இல் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலிருந்து நகரத்தில் வதியும் வாழ்க்கையின் மூலமாக, அவர்களின் சருமத்தில் வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதில் 10% பங்களிப்பை வழங்கியிருந்தன. போடி சொப் புத்தம் புதிய சரும தடுப்பு Multi-Protection Essence என்பது நகர வாழ்க்கையில் சருமத்துக்கு ஏற்படக்கூடியப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.  

The Body Shopஇன் அழகியல் சிகிச்சை நிபுணர் வெந்த செர்ரடர் கருத்துத் தெரிவிக்கையில், “நகர வாழ்க்கை என்பது விறுவிறுப்பானது, அதாவது உங்கள் சருமம் அதிகளவுப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப் புறக்காரணிகளுக்கு சருமம் வெளிப்படுத்தப்படும் போது, இயற்கையாக நீர் செறிமானத்தை இழந்து, சருமத்தில் பாதிப்பை ஏற்படக்கூடிய நிலையை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் சருமம் வெடிக்கவும் கூடும். வயது முதிர்ந்தத் தோற்றத்தைக் காண்பிக்கும். இந்தப் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க இந்தத் தயாரிப்பு உறுதியாகவும் தெரிவாகவும் அமைந்துள்ளது” என்றார்.  

இச் சேர்மானத்தை இலகுவான தன்மையின் மூலமாக, சருமப்பாதுகாப்பு என்பது வேகமாகவும், இலகுவாகவும் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.The Body Shop இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக, 10இல் 9 பெண்கள் ஒட்டாத இந்த சேர்மானம் இலகுவான எடை கொண்டதுடன், சருமத்தினுள் வேகமான உட்பிரவேசிக்கக்கூடியது என்பதை உணர்ந்திருந்தனர். SPF 50 சேர்மானத்தின் மூலமாக குறுகிய மற்றும் நீண்ட UVA கதிர்களிலிருந்து சருமம் பாதிப்படைதலை பாதுகாக்கிறது.  

100% தாவர மூலப்பொருட்களைக்கொண்ட இந்தத் தயாரிப்பு, சருமத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித மூலப்பொருட்களையும் கொண்டிருக்கவில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .