‘தண்டப்பணத்தை அறவிடவேண்டும்’
06-12-2016 09:11 AM
Comments - 0       Views - 10

அழகன் கனகராஜ்

விபத்துக்களால் காயமடைந்தவர்களுக்கு வைத்தியசாலைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான கொடுப்பனவுகளை தனியார் பஸ் உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் தண்டப்பணம் அறவிடப்பட

வேண்டும் சுகாதாரம் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடமிருந்து 25,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடும் முறையை, எக்காரணத்தைக் கொண்டும் நீக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“திடீர் விபத்துக்கள்தான் தொற்றாநோய்களில் முக்கியமானதொரு அங்கமாக உள்ளன. அவசர மற்றும் விபத்து பற்றி வேலைத்திட்டமொன்றை நாடு முழுவதிலும் ஆரம்பிக்கவுள்ளோம். வீதி விபத்துக்களால் இவ்வருடத்தில் 25,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.  

விபத்துக்களால் உபாதைக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். எவ்வாறிருப்பினும் தற்போது விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையின் பெறுபேறாக, வாகன விபத்துக்கள் மூலமான உயிரிழப்புக்கள் 10 சதவீதம் குறைவடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்” என்றார்.

"‘தண்டப்பணத்தை அறவிடவேண்டும்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty