2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தங்க விருதை தனதாக்கியது Maxtherm Lanka

Gavitha   / 2016 டிசெம்பர் 06 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனல் வலு வினைத்திறன் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஈடுபட்டுள்ள Maxtherm Lanka (Pvt) Ltd, இலங்கை தேசிய வலு வினைத்திறன் விருதுகள் 2016இல் தங்க விருதை தனதாக்கியிருந்தது. வலுப்பாவனையைக் குறைப்பதற்கான வலு முகாமைத்துவ செயற்பாடுகளின் பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.  

வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன், அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  

Maxtherm Lanka (Pvt) Ltdஇன் தொழில்நுட்ப பணிப்பாளர், பொறியியலாளர் கயா சிறிவர்தன, துறையில் பெருமளவு அனுபவம் பெற்றவராக திகழ்கிறார். இவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் தொடர்ச்சியாக வழங்கி வரும் வலுச்சேமிப்பு செயற்பாடுகள் மற்றும் அதில் கொண்டுள்ள அனுபவம் ஆகியவற்றுக்காக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்வரும் காலங்களில் மாபெரும் செயற்றிட்டங்களில் பிரவேசிக்க நாம் திட்டமிட்டுள்ளோம், அதனூடாக சந்தையில் மிகவும் உயர்ந்த நிலையை எம்மால் எய்தக்கூடியதாக இருக்கும்” என்றார்.  

இந்த விருதை இதற்கு முன்னரும் இந்நிறுவனம் வென்றுள்ளதுடன், 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் வெண்கல விருதுகளைத் தனதாக்கியிருந்தது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புகளைப் பூர்த்தி செய்துள்ள பொறியியலாளர் சிறிவர்தன, Maxtherm Lanka நிறுவனத்தின் வெற்றிகரமான இயக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கிறார். இவர் இலங்கை பொறியியலாளர்கள் சம்மேளனம் மற்றும் இலங்கை உயிரியல் வலு சம்மேளனத்தின் அங்கத்தவர் என்பதுடன்,SLSEA ன் தகைமை வாய்ந்த ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 5.4 மில்லியன் லீற்றர் எரிபொருள் மற்றும் 0.23 மில்லியன் லீற்றர் டீசல் ஆகியவற்றுக்கு பதிலாக மாற்றீட்டு வலுக்களை வழங்கி நாட்டுக்கு மொத்தமாக 464 மில்லியன் ரூபாயை சேமிக்க நிறுவனம் கடந்த ஆண்டில் பங்களிப்பை வழங்கியிருந்தது. 217,000 அலகுகள் மின்சார வலுவை சேமிக்கவும், 14700 டொன்கள் காபனீரொட்சைட் வெளியீட்டை தவிர்க்கவும் பங்களிப்பு வழங்கியிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X