2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'மட்டு. வாவியின் அழகைப் பேண நடவடிக்கை எடுக்கவும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு வாவி மாசுபடுத்தப்படுவதைத் தடுத்துநிறுத்தி அதன் அழகைப் பேணுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

'மட்டக்களப்பு வாவியைத் தூய்மையாகப் பாதுகாப்பதன் மூலம் நோய்த்தொற்றைத் தடுத்தலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும்' என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர்; திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு செவ்வாய்க்கிழமை (06) மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே, அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'சம்மாந்துறையைத்  தெற்கு எல்லையாகவும் பன்குடாவெளியை வடக்கு எல்லையாகவும் கொண்ட மட்டு. வாவியின் தூய்மையைப் பாதுகாத்து, அடுத்த சந்ததிக்கு கையளிக்க வேண்டிய  பொறுப்பு தங்களுக்கும் எனக்கும்  உள்ளது என்பதைக்; கருத்திற்கொண்டு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

வாவியின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், வாவி மாசுபடுகின்றது. குறிப்பாக, காத்தான்குடி நகரசபையானது வாவியில் குப்பைகளைக் கொட்டுவது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலை, வைத்தியசாலைகளின் மலக்கழிவுகள் வாவியில் விடப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்களால் வாவி குப்பைத் தொட்டியாக மாறி வருகின்றது. அத்துடன், இவ்வாவியில் மீன்வளம் அழிவதுடன், நோய்த்தொற்றும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இது தொடர்பில் மக்கள் அறிந்தால் அவ்வாவியில் பிடிக்கப்படும் மீன்களை மக்கள் உட்கொள்ள மாட்டார்கள். இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, சிறைச்சாலையிலிருந்து நான் எழுதும் இக்கடிதத்தை உதாசீனம் செய்யாமல், வாவியின் தூய்மையைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .