2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அம்மானுக்கு பிணை

George   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திபான் பேரின்பராஜா

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட  கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன், வௌிநாட்டுக்குச்  செல்ல, கருணா அம்மானுக்கு தடை விதித்த நீதவான்,  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

மேலும், அடுத்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி நடைபெறும் என்றும் நீதவான் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X