யாழ். நூலகத்துக்கு தீ வைக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டார் பிரதமர்
07-12-2016 11:33 AM
Comments - 0       Views - 101

அழகன் கனகராஜ்

"யாழ்ப்பாணம் நூலகத்துக்கு, எமது ஆட்சிக்காலத்தில் தான் தீ வைக்கப்பட்டது. அதற்கான நான் மன்னிப்பு கோருகின்றேன்" என்று சபையில் தெரிவித்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  ஒன்றிணைந்த எதிரணியைப் பார்த்து, உங்களுடைய காலத்தில் இடம்பெற்ற பிழைகளுக்காக மன்னிப்பு கோருவீர்களா? என்றும் வினவினார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் வீடுகளை கட்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு குறைந்தப்பட்சம் இன்னும் ஒரு பில்லியன் டொலர்  தேவைப்படுகிறது. வடமாகாண முதலமைச்சரை கடந்த வாரம் நான் சந்தித்தேன். அந்தத் திட்டத்துக்கு தேவையான பணத்தை நாம் பெறுவோம். மக்கள் மீது வரி விதிக்காமல் இந்த பணத்தை நாம் தேடித் தருகிறோம். அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

"யாழ். நூலகத்துக்கு தீ வைக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்டார் பிரதமர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty