2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2 பாடசாலைகளில் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,தீஷான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 2 பாடசாலைகளில் க.பொ.த. சாதாரணதரம் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவர்கள் சிலர் பெரும்பான்மையின மேற்பார்வையாளர்கள் சிலரால்  இன்னல்களுக்கு உள்ளாகியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

கந்தளாய் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சை எழுதச் முஸ்லிம் மாணவிகளிடம் பர்தா, ஹிஜாப் போன்றவற்றையும் முஸ்லிம் மாணவர்களிடம் தாடியையும் அகற்ற வேண்டும் என்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்களின் கடும் விவாதத்துக்கு   மத்தியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பரீட்சை எழுதியதாகத் தெரியவந்துள்ளது. மறுநாள் வரும்போது  முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும்; அவர் கூறினார்.

இது குறித்து பிரதேச மக்கள் தனது கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறானதொரு சம்பவம் இன்று புதன்கிழமை திருகோணமலைக் கல்வி வலயத்திலும் இடம்பெற்றுள்ளது.
பரீட்சை எழுத வந்த முஸ்லிம்; மாணவிகளை  திடீர் என பரீட்சை எழுத விடாமல் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவிகளிடம்  பர்தா, ஹிஜாப் போன்றவற்றை  அகற்றவேண்டும் என கடுமையாக  விவாதித்தினர். பரீட்சை எழுதிய நிலையில் மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்  சட்டத்தரணியுமான  அல்ஹாஜ்.ஜே.எம்.லாகீரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சருடனும்; தொடர்பை ஏற்படுத்தியதுடன்,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும்  மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை தீர்க்கும் முகமாக  குறித்த பாடசாலை  பரீட்சை நிலையத்திற்கு மாகாண பணிப்பாளர்  மற்றும் வலய கல்வி பணிப்பாளர் அடங்கிய விசேட குழுவினர்  உடன் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .