'புலியிடமா ரணில் மன்னிப்பு கேட்டார்'
08-12-2016 08:44 AM
Comments - 0       Views - 74

அழகன் கனகராஜ்

"யாழ். நூலகத்தை புலிகளே எரித்தனர். புலிகள் எரித்ததன் பின்னரே, தெற்கு குண்டர்களை பயன்படுத்தி, நூலகத்துக்கு எரியூட்டப்பட்டது" என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, "அப்படியானால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தச் சபையில், புலிகளிடமா மன்னிப்புக் கேட்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "யாழ். நூலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்களே எரித்ததாகவும் அதற்காக, தான் மன்னிப்புக் கோருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களிடம், இந்தச் சபையிலிருந்து அண்மையில் மன்னிப்புக் கேட்டார். எனினும், யாழ்ப்பாணத்தில் கடமையிலிருந்த முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி எழுதிய புத்தகமொன்றில், யாழ்.நூலகத்தை புலிகளே எரித்தனர். அதற்கு பின்னரே, தெற்கிலிருந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள் எரியூட்டினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

"அப்படியானால், ரணில் விக்கிரமசிங்க இந்த சபையில் இருந்து கொண்டு புலிகளிடமா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்" என்றும் கோரிநின்றார்.

"'புலியிடமா ரணில் மன்னிப்பு கேட்டார்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty