2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Gamer.LKஇன் வருடாந்த eSports, Video Games & Comic மாநாடு

Gavitha   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த eSports சம்பியன்ஷிப் மற்றும் நிகழ்வுகள் டிசம்பர் 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் போது, தேசத்தின் தேசிய eSports போட்டித்தொடரான ஸ்ரீ லங்கா சைபர் கேம்ஸ் (SLCG) Gamer.lKஇனால் தொடர்ச்சியாக 9ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறவுள்ளது.

நாட்டின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த கேமர்களை இந்தப் போட்டியில் உள்வாங்கத் திட்டமிட்டுள்ளது. தகுதி காண் போட்டிகள் வட, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெற்றன. இதன்போது மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். eSports சம்பியன்ஷிப்களுக்கு நிகராக கொழும்பு Comic மாநாடு இதே வளாகத்தில் டிசம்பர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெறும். இலங்கையின் கலை, திரைப்படம், Cosplay மற்றும் geek கலாசாரம் ஆகியவற்றை இரு தினங்களிலும் வெளிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத்தொடரில் இறுதி நிகழ்வாக கொழும்பு eSports மாநாடு நடைபெறவுள்ளது. கண்டி Comic மாநாடு நவம்பர் மாதம் கண்டி சிட்டி சென்டரில் நடைபெற்றது.  

கடந்த ஆண்டு சுமார் 2,500 போட்டி பங்குபற்றுநர்களைக் கவர்ந்திருந்ததுடன், மேலும் 20000 பேர் வரை பார்வையாளர்களாக இணைந்து கொண்ட SLCG, இலங்கையில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்திருந்தது. இலங்கை eSports சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது நிகழ்வுகளில் ஒன்றாகவும் SLCG அமைந்துள்ளது. Gamer.LK (www.gamer.lk இனால் ஏற்பாடு செய்யப்படும் multi-genre video gaming சமூகத்துக்கு டிஜிட்டல் மகிழ்ச்சியூட்டும் அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.  

இந்த நிகழ்வு, இலங்கையில் டிஜிட்டல் மகிழ்ச்சியூட்டும் அம்சங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், வளர்ந்து வரும் டிஜிட்டல் மகிழ்ச்சியூட்டும் கலாசாரத்தையும் கொண்டுள்ளது. கொழும்ப Comic Conஇல் புகழ்பெற்ற துறைசார்ந்த நிபுணர்கள், கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் கொமிக் கலைஞர்கள் ஆகியோரின் கலந்துரையாடல்கள் நடைபெறும். பங்குபற்றுநர்கள் தமக்கு விருப்பமான கதாபாத்திரங்களைப் போன்று ஆடைகளை அணிந்து சமூகமளிக்குமாறு கோரப்படுகின்றனர்.  

இந்த வளர்ந்து வரும் கலாசாரத்துடன், முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் முன்வந்து இந்தத் திட்டத்துக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளன. வேகமான மற்றும் குறைந்தத் தடைகள் கொண்ட இணைப்புகளை வழங்கும் டயலொக், SLCG மற்றும் கொழும்பு Comic Conக்கு 4ஆவது ஆண்டாக பங்களிப்பு வழங்கவுள்ளனர். Gamer.LK உடன் இணைந்து cloud gaming serve நிறுவவும் டயலொக் முன்வந்துள்ளது. இதன் மூலமாக multiplayer online eco கட்டமைப்பை உருவாக்க முடியும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .