25 துவிச்சக்கரவண்டிகள் மீட்பு; சந்தேகநபர் கைது
08-12-2016 12:43 PM
Comments - 0       Views - 17

எம்.இஸட்.ஷாஜஹான்
 
நீர்கொழும்பு நகரில் துவிச்சக்கரவண்டிகளைத் திருடிய நபரொருவரைக் கைதுசெய்துள்ளதாகவும், 25 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதாகவும், நீர்கொழும்புப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்ன இன்று (08) தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், நீர்கொழும்பு, கதிரானைப் பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் நகரின் மீன் விற்பனைச் சந்தையொன்றில் மீன் வெட்டுபவராகத் தொழில் செய்பவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டிகளை, சந்தேகநபர் திருடியுள்ளதுடன், அதனை விற்பனை செய்து போதைப்பொருள் பாவனைக்குப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்காவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்ன  தலைமையின் கீழ், திருடப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, நீர்கொழும்புப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

"25 துவிச்சக்கரவண்டிகள் மீட்பு; சந்தேகநபர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty