2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரவு –செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் 'எந்தவொரு இனத்தையும் பாதிக்காத நிதி ஒதுக்கீடு வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் எந்த இனத்தையும் பாதிக்காத வகையில் நிதி ஒதுக்கப்பட வேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாணசபையின் அமைச்சர் வாரியம், ஆளுநர், நிதிச்செயலாளர், திட்டமிடல் பிரிவுகளுக்கு உள்ளதாக அம்மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

ஆகவே, இனவிகிதாசார அடிப்படையிலும் மாவட்ட அடிப்படையிலும்; நிதி ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 23ஆம் திகதிவரை விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே, நேற்று (08) அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2016ஆம் ஆண்டை விட, 2017ஆம் ஆண்டு வருமானத்துக்கான நிதியை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற  விடயத்தில் சந்தேகம் உள்ளது.

இம்மாகாணத்திலுள்ள பிரதேசப் பிரிவுகளில் இதுவரை காலமும் மிகக்குறைவான நிதி ஒதுக்கப்பட்ட பிரிவுகளாக வாகரை, கிரான் உள்ளிட்டவை காணப்படுகின்றன. எனவே மாகாணம், மாவட்டம், பிரதேச செயலகப் பிரிவு அடிப்படையில் மக்கள் தேவைக்கேற்ப வறுமையை முன்னிறுத்தி விகிதாசாரத்தைக்; கணக்கில் எடுத்து நிதி ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .