2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தெங்கு அபிவிருத்தி செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளது நெஸ்லே லங்கா

Gavitha   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசரீதியாக 150 ஆண்டுகள் பூர்த்தியையும், உள்நாட்டில் 110 ஆண்டுகள் பூர்த்தியையும் கொண்டாடும் வகையில், உள்நாட்டில் தேங்காய் உற்பத்தித் தொழிற்துறையை மேம்படுத்த உதவும் மற்றுமொரு பாரிய அர்ப்பணிப்புடனான முயற்சியை நெஸ்லே நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இலங்கை தெங்கு அபிவிருத்திச் சபையுடன் இணைந்து, தென்னந் தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ள 2,000 குடும்பங்களுக்கு 150 ஏக்கர் பரப்பில் நாட்டுவதற்கு 10,000 தென்னங்கன்றுகளை நிறுவனம் நன்கொடையளிக்கவுள்ளதுடன், மிகச் சிறந்த நடைமுறைகளைக் காண்பிப்பதற்காக, 2 மாதிரி தென்னந் தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளது.

நெஸ்லே நிறுவனம், உள்நாட்டு சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுத்து வருகின்ற பல்வேறு பொது அர்ப்பணிப்புச் செயற்திட்டங்கள் மத்தியில் மற்றுமொரு முன்னெடுப்பாக இந்த தெங்கு அபிவிருத்திச் செயற்றிட்டம் அமைந்துள்ளது. நிக்கரவெட்டியவில் மாதிரிப் பண்ணையில் தென்னங்கன்றுகளை நாட்டும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரான கௌரவ நவீன் திசாநாயக்க இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கௌரவ அமைச்சர், தெங்கு அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நெஸ்லே நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சபைத் தலைவரான சுரேஷ் நாராயணன், நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷpவானி ஹெக்டே மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகள் முன்னிலையில் நெஸ்லே நிறுவனத்தின் 150 ஊழியர்களும், தென்னந்தோட்ட செய்கையாளர்களும் இணைந்து தென்னம் கன்றுகளை நாட்டி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .