'த.தே.கூ பிச்சை எடுக்கவில்லை'
10-12-2016 02:12 PM
Comments - 0       Views - 259

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தவுக்கு, இணக்க அரசியல் என்றால் என்ன என்று தெரியவில்லை. நாங்கள், இணக்க அரசியல் செய்யவில்லை. சரியாகக் கூறுவதாயின் நாங்கள் பிச்சை எடுக்கவில்லையென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன், அரசாங்கத்திடம் சலுகைகளை பெறவில்லை என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருக்கும், வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களுக்கு தேவையானவற்றுக்கு, சரியானவற்றுக்கு நாம் ஆதரவளிப்போம். ஆனால், கடந்த அரசாங்கத்தின் போது, இணக்க அரசியல் செய்வதாகக் கூறிக்கொண்டு டக்ளஸ் தேவானந்த, குட்டி மன்னர் போல செயற்பட்டார்.

அக்காலத்தில் தான், யாழ்ப்பாணத்தில் பலர் கொல்லப்பட்டனர். அவை தொடர்பில் விரையில் வெளிவரும். ஒரு சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த இருவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

"'த.தே.கூ பிச்சை எடுக்கவில்லை'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty