100% புதுப்பிக்கத்தக்க சக்தியையடையவுள்ள கூகுள்
08-12-2016 10:18 AM
Comments - 0       Views - 43

ஒவ்வோராண்டும் ட்றில்லியன் கணக்கான தடவைகள் கூகுளில் மக்கள் தேடுகின்றனர்; ஒவ்வொரு நிமிடமும் 400 மணித்தியாலத்துக்கும் அதிகமான யூட்யூப் காணொளிகள் தரவேற்றப்படுகின்றன. இவற்றுக்கு, பாரியளவிலான தொழிற்பாட்டு சக்தி தேவைப்படுகிறது.

இந்நிலையிலேயே, தொழிற்துறை சராசரியை விட 50 சதவீதத்துக்கு அதிகமான சக்தித் திறனுடையவையாக கூகுளின் தரவு நிலையங்கள் இருக்கின்றன. இருந்தபோதும், கூகுளின் பயனர்கள் தங்கியுள்ள தயாரிப்புகள், சேவைகளை வழங்குவதற்கு மேலும் பாரியளவு சக்தி தேவைப்படுகிறது.

இந்நிலையில், தமது தரவு நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளடங்கலாக தமது பூகோள நடவடிக்கைகளில், 100 சதவீத புதுப்பிக்கத்தக்க  சக்தியை கூகுள் அடையும் என கூகுளின் தொழில்நுட்பப் பிரிவின் சிரேஷ்ட உப தலைவரான உர்ஸ் ஹொல்ஸே தெரிவித்துள்ளார்.

 

 

"100% புதுப்பிக்கத்தக்க சக்தியையடையவுள்ள கூகுள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty