சம்பியனானது அக்கரைப்பற்று நோநேம்
28-11-2016 08:34 PM
Comments - 0       Views - 25

- எஸ்.எம்.எம்.றம்ஸான்

சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 3 ஓட்டங்களினால் வெற்றிபெற்று அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக் கழகம் கிங் ஹோஸஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

சாய்ந்தமருது பௌஸ் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில், கழகத்தின் தலைவர் ஏ.எல்.முஹம்மட் தலைமையில் அண்மையில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது லெம்கோ விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக் கழகம் இறுதி வரை போராடி 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக் கழகம் 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது லெம்கோ விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேரந்த 48 விளையாட்டுக்கழகங்கள் பங்கேற்ற மேற்படி சுற்றுப் போட்டி தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் நௌபரும் சிறந்த பந்து வீச்சாளராக சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக்கழக எம் .பயாஸும் தொடராட்டக்காரராக சாய்ந்தமருது லெம்கோ விளையாட்டுக்கழக நிஸ்கி அஹமதும் ஆட்டநாயகனான அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழக முஹமட் ஸாபிரும் விரைவான 50 ஓட்டங்களைப் பெற்றவராக கோட்டை கல்லாறு விளையாட்டுக்கழக பிரதீப்பும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிப் போட்டிக்கு அம்பாறை மாவட்ட கரையோர கிரிக்கெட் மத்தியர் சங்கத்தைச் சேரந்த ஏ.டபிள்யு.எம்.ஜெஸ்மின் மற்றும் முஹம்மட் றியாஸ் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றினார்கள்.

"சம்பியனானது அக்கரைப்பற்று நோநேம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty