சம்பியனானது வீரத்திடல் எவென்ஜர்ஸ்
12-12-2016 07:29 PM
Comments - 0       Views - 22

- ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய சமூக சேவை மாதத்தை முன்னிட்டு, சவளக்கடை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் சவால் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில், வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

சனிக்கிழமை (10) இடம்பெற்ற இத்தொடரானது, 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட தொடராக அமைந்தது. இறுதிப் போட்டிக்கு, வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகமும் 12ஆம் கொலனி பிரண்ட்ஸ் விளையாட்டுக்கு கழகமும் தெரிவாகின.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகம், முதலில் துடுப்படுத்தாடி 5 ஒவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஒட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 12ஆம் கொலனி பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 4.1 ஒவர் நிறைவில் 40 ஒட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.

தொடர் நாயகனாக, வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் எம்.எம். பாஹாத், சிறந்த துடுப்பாட்ட வீராக வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் எஸ்.றிபாஸ், சிறந்த பந்து வீச்சாளராக 12ஆம் கொலனி பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் ஏ.சீ.இர்பான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு, சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்றபோது, நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.தம்பிக்க பியந்த, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜெ.எஸ்.கருணாசிங்க, நாவிதன்வெளி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

"சம்பியனானது வீரத்திடல் எவென்ஜர்ஸ் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty