தோட்டத் தொழிலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு
15-12-2016 05:50 PM
Comments - 0       Views - 43

சர்வதேச தேயிலை தினம், எதிர்வரும் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தத் தினத்தில் போற்றப்படவேண்டியவர்கள், தேநீர் சுவைக்காக வாழ்க்கையின் பல சுவைகளை அறியாத பெருந்தோட்டத் தொழிலாளர் வர்க்கமே.

எனவே, அவர்களை கௌரவிக்கும் முகமாகவும், இதுவரை காலமும் அவர்களுக்காக உயிர்நீத்த தோட்ட தொழிலாள வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை, காலை 11.30 மணிக்கு கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் வந்து கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழ் இளம் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகிய இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

" தோட்டத் தொழிலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty