ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண்
19-12-2016 04:40 PM
Comments - 0       Views - 5936

ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார்.

விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர், உணவு கிடைத்துள்ளது. தேங்ஸ் சொல்லிவிட்டு, சாப்பாட்டை பார்த்ததும் அப்பெண், திக்குமுக்காடி போனார். ஆணுறுப்பு போன்று, அல்ல... ஆணுறுப்பேதான் அந்த சாப்பாட்டு தட்டில் கிடந்தது.

சற்று பதற்றமடைந்து போன அப்பெண், உணவை தொட்டுக்கூட பார்க்காமல், கண்களை மூடிக்கொண்டு விமானப்பணியாளரை அழைப்பதற்குள், பணியாளர் அவ்விடத்திலிருந்து சற்று தூரத்துக்கு சென்றுவிட்டார். எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட அப்பெண், சாப்பாட்டை நன்றாக கவனித்துள்ளார்.

தன்னிடமிருந்த அலைபேசியில், அந்த உணவு தட்டை படம்பிடித்துகொண்டு, விமானத்தை விட்டு கீழிறங்கியதும் அப்படத்தை சமுகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். அந்தப்படத்தை மில்லியன் கணக்கானோர் பார்த்துவிட்டனர்.

அந்த சாப்பாட்டை நன்றாக உற்றுநோக்கினால், அது ஆணுப்பை ஒத்தமாதியானதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த விமான சேவைக்கான சமையற்காரரை கேட்கும் போது, விமானத்தில் பயணிப்போருக்கு கிடைக்கின்ற உணவுகள் தொடர்பில் வித்தியாசமான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

"ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty