பயணச்சீட்டு இன்றி பயணித்த 80 பேர் கைது
23-12-2016 01:08 PM
Comments - 0       Views - 95

கொழும்பிலிருந்து காலிக்கு பயணித்த ரயில்களில், பயணச்சீட்டு இன்றி பயணித்த, 80 பேரை, நேற்று (22) கைதுசெய்துள்ளதாக, ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 10 பெண்களும், வியாபாரிகள் மூவரும் உள்ளடங்குவதாக அவர்கள் மேலும் கூறினார்.

இவர்களில், 75 பேருக்கு, தலா 3,050 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் மேலும் கூறினர்.

"பயணச்சீட்டு இன்றி பயணித்த 80 பேர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty