மெசஞ்சரில் குழுக் காணொளி அரட்டை
20-12-2016 11:19 PM
Comments - 0       Views - 33

இவ்வாண்டின் இறுதியை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், பேஸ்புக்கின் தகவல் பரிமாற்றச் செயலியான மெசஞ்சரில், அதிகம் வினவப்பட்ட வசதியான, குழுக்களில் காணொளி அரட்டைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அன்ட்ரொயிட், iOS சாதனங்கள், மெசஞ்சரின் டெஸ்க்டொப் பதிப்பிலும், நேற்று முன்தினம் (19) முதல் உலகளாவிய ரீதியில் குழுக் காணொளி அரட்டை மெசஞ்சரில் அறிமுகமாகியிருந்தது.

குழுக் காணொளி அரட்டையில், ஒரே தடவையில் ஆறு பேரைப் பார்க்க முடியுமென்பதுடன், 50 பேர் வரையில் இணைந்து கொள்ள முடியும். ஆறு பேர்களுக்கு அதிகமானோர் அழைப்பில் வரும்போது, குறித்த அழைப்பில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், அழைப்பின் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் காண்பிக்கப்படுவர்.

 

"மெசஞ்சரில் குழுக் காணொளி அரட்டை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty