டுவிட்டரின் தொழில்நுட்ப அதிகாரி விலகுகிறார்
21-12-2016 08:23 AM
Comments - 0       Views - 59

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து விலகுவதாக, டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்பட அதிகாரி அடம் மெசிஞ்சர், டூவீட்டொன்றில் நேற்று (20), தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் பொறியியல் உப தலைவரான எட் ஹோ அனைத்து தயாரிப்பு மற்றும் பொறியியற் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார் என்றும், டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜக் டோர்சிக்கு அறிக்கையளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஐந்தாண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற மெசிஞ்சர், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாயிருந்தார். டுவிட்டர் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு இணைய முன்னர், ஒராக்கிள் நிறுவனத்தின் உப தலைவராக மெசிஞ்சர் இருந்திருந்தார்.

"டுவிட்டரின் தொழில்நுட்ப அதிகாரி விலகுகிறார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty