பேஸ்புக் மீது குற்றச்சாட்டு
22-12-2016 08:25 AM
Comments - 0       Views - 250

தகவல் பரிமாற்றச் சேவையான வட்ஸ்அப்பை 22 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கான அனுமதியைப் பெற முயன்றபோது, தவறாக வழிநடத்துகின்ற தகவல்களை வழங்கியதாக பேஸ்புக் மீது ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முன்தினம் (20) குற்றஞ்சாட்டியுள்ளது.

எவ்வாறெனினும், 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மேற்படி வாங்குகைக்கு ஐரோப்பிய ஒன்றியம் காண்பித்த பச்சை சமிக்ஞையில் பிரச்சினை இல்லையென்று ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்தபோதும், 200 மில்லியன் யூரோக்களை, பேஸ்புக் அபாராதமாகச் செலுத்த வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகளில் சிக்கியுள்ள ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களான அப்பிள், கூகுள், அமெஸொன், மைக்ரோசொப்ட் ஆகியவற்றுடன் பேஸ்புக்கும் இணைந்துள்ளது.

"பேஸ்புக் மீது குற்றச்சாட்டு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty