2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

FIFA விருதுகள் (பகுதி 02)

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 07 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

பயிற்றுவிப்பாளர்கள்

சர்வதேச அணிகளுக்கும், கழக அணிகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களாக இருக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் விருதுகளை வழங்கி வருகின்றது. கால்பந்தாட்ட போட்டிகளில் வீரர்கள் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு, சிலவேளைகளில் அதனையும் தாண்டி பயிற்றுவிப்பாளர் முக்கியமாக கருதப்படுகின்றார். அணித்தெரிவு முதல் அணியின் சகல விடயங்களுக்கும் பொறுப்பானவராக இருப்பவர் இவரே. எனவேதான் இவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். 10 பயிற்றுவிப்பாளர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வாக்குகள் அளிக்கப்பட்டது. அவர்களில் கூடுதல் வாக்குகளை பெற்ற மூவர் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஆண் அணிகளுக்கான பயிற்றுவிப்பாளர்கள்

இம்முறை ஆண் அணிகளுக்கான பயிற்றுவிப்பாளர்களின் இறுதிப்பட்டியலில் இத்தாலியை சேர்ந்த லெய்செஸ்டர் சிற்றி அணியின் பயிற்றுவிப்பாளர் கிளாடியோ றைனேரி, போர்த்துக்கல் அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்ணான்டோ சான்டோஸ், றியல் மட்ரிட் அணியின் பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் ஸினேடிஸிடன் ஆகியோர் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துளள்னர்.

கிளாடியோ றைனேரி

இவர் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர். இவருக்கே விருது வெல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று சொல்லலாம். இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் வரலாற்றில் முதற் தடவையாக லெய்செஸ்டர் சிற்றி சம்பியன் ஆகியது. 2015/16 ஆம் ஆண்டுக்கான பருவகாலத்தில் இவர் பொறுப்பேற்றார். முதற் தொடரில் மிக அபாரமான வெற்றி. இந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை 1/5000 என வழங்கியிருந்தனர் பந்தயக்காரர்கள். சாத்தியமே இல்லை என்ற விடயத்தை சாதகமாக மாற்றிக்காட்டினார். 2015/16 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிறீமியர் லீக் முகாமையாளர் என்ற விருதை வென்றுள்ளார். எனவே சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.

பெர்ணான்டோ சான்டோஸ்

போர்த்துக்கல் அணிக்கு அவர்கள் பெற்ற மிகப்பெரிய கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார் சான்டோஸ். ஐரோப்பிய கிண்ணத்தை போர்த்துக்கல்லுக்கு வென்று கொடுத்துள்ளார் இவர். இதன் காரணமாகவே இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவருடைய மதிநுட்பமான முகாமைத்துவமே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என போற்றப்படுகின்றது. அணிக்குள் ஒற்றுமையையும் இணைந்து விளையாடும் தன்மையையும் வீரர்களின் மனநிலையையும் மெருகேற்றியமையே போர்த்துக்கல் அணியின் வெற்றிக்கு காரணமாக குறிப்பிடப்படுகின்றது. இவர் மேலதிக வீரர்களை சரியாக மாற்றம் செய்து அவர்களிடம் இருந்து நல்ல பலனை பெற்றுக்கொடுத்துள்ளார் எனவும் போற்றப்படுகின்றார். இவர் ஒரு முக்கிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.

ஸினேடி ஸிடன்

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் முதன்மை வீரர். இந்நாளில் பயிற்றுவிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு பயிற்றுவிப்பாளராக களமிறங்கிய ஸிடன், இரண்டாண்டுகளில் விருதுக்காக தெரிவாகியுள்ளார். 2016ஆம் ஆண்டு றியல் மட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்றவர். அதேயாண்டில் தனது அணிக்கு சம்பியன்ஸ் லீக்கை கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். றியல் மட்ரிட் அணியின் முன்னாள் ஹீரோ, இந்நாள் பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழி நடத்தி வருகின்றார். ஐரோப்பிய சம்பியன்ஸ்‌ லீக் கிண்ணத்தை றியல் மட்ரிட் அணிக்காக வெற்றி பெற்றுக்கொடுத்தவர். குறித்த தொடரின் சிறந்த வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளார் விருதை வென்ற ஏழாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுக்கொண்டார். உலகின் சிறந்த வீரர் என்ற விருதை மூன்று தடவைகள் வென்றுள்ள இவர் பயிற்றுவிப்பாளராகவும் குறித்த விருதை வெற்றி பெற்றால் இரண்டு வித விருதுகளையும் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெறுவார்.

விருதுக்காக தெரிவானவர்கள் விபரம்

* கிறிஸ் கோல்மன் (வேல்ஸ்)

* டீடியர் டெஸ்சம்ப்ஸ் (பிரான்ஸ்)

* பெப் குவார்டிலோ(பெயார்ண் மியூனிச் / மன்செஸ்டர் சிற்றி)

* ஜுர்ஜன் க்ளோப (லிவர்பூல்)

* லூயிஸ் என்றிக்கே(பார்சிலோனா)

* மொரிஷியோ பொச்சென்கோ(டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்)

* கிளாடியோ றைனேரி(லெய்செஸ்டர் சிற்றி)

* பெர்ணான்டோ சான்டோஸ் (போர்த்துக்கல்)

* டியகோ சிமயோனே (அத்தலெட்டிகோ  மட்ரிட்)

* ஸினேடி ஸிடன் (றியல் மட்ரிட்)

 

மகளிர் பயிற்றுவிப்பாளர்

மகளிர் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சிகளை வழங்கியவர்கள் இந்த பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தலா 5 ஆண்களும் பெண்களும் தெரிவாகியுள்ளார்கள். ஆனால் இறுதிப்பட்டியலில் தெரிவாகியுள்ள மூவரும் பெண்களே. இந்த மூவரும் ஏற்கனவே விருதுகளை வென்றுள்ளவர்களே.

 

ஜில்லியன் எல்லிஸ்

அமெரிக்கா மகளிர் கால்பந்தாட்டத்தில் மிக முக்கிய இடத்தில உள்ளவர் இவர். கடந்த வருடம் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சிறந்த மகளிர் அணிக்கான பயிற்றுவிப்பாளர் விருதை பெற்றவர் இவரே. 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா அணிக்கு நல்ல வருடமாக அமையாத போதும் இவரின் பயிற்றுவிப்பு திறமைக்காக விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

சில்வியா நெய்ட்

பயிற்றுவிப்பாளர்களில் அதிக தடவைகள் விருதைப் பெற்றவர் இவரே. இரண்டு தடவைகள் வென்றுள்ளார். ஜேர்மனி மகளிர் அணியின் வீராங்கனையாகவும், அணியின் உப பயிற்றுவிப்பாளராகவும், தலைமை பயிற்றுவிப்பாளராகவும் மிக வெற்றிகரமானவராக திகழ்ந்து வரும் இவர் 2016 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஜேர்மனி அணி தங்கம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவருக்கே இந்த வருடம் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பியா சுன்டகி 

2012ஆம் ஆண்டின் வெற்றியாளர் இவர். சுவீடன் அணி ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாமிடத்தை பெற காரணமாக அமைந்துள்ளார். பலமான அமெரிக்கா அணியை காலிறுதியில், பிரேஸில் அணியை அரை இறுதியிலும் தோற்கடித்து 2016 ஆம் ஆண்டை சுவீடன் நாட்டின் வெற்றிகரமான ஆண்டாக இவர் மாற்றியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா அணியின் பயிற்றுவிப்பாளராக தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ள இவர் சுவீடன் அணிக்காக வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

விருதுக்காக தெரிவானார் விபரம்

* பிலிப் பேர்ஜிரோ (பிரான்ஸ்)

* ஜிலியன் எல்லிஸ் (அமெரிக்கா)

* ஜோன் ஹேர்ட்மான்  (இங்கிலாந்து / கனடா)

* சில்வியா நெய்ட் (ஜேர்மனி)

* வேரா பவ் (நெதர்லாந்து / தென் ஆப்பிரிக்கா)

* ஜெரார்ட் ப்ரசூர்  (பிரான்ஸ் / ஒலிம்பிக் லியோன்னய்ஸ்)

* பியா சுன்டகே  (சுவீடன் )

* ஒஸ்வால்டோ வடோ (பிரேசில்)

* மார்டினா வொஸ் - டெக்கன்பேர்க்   (ஜேர்மனி / சுவிஸர்லாந்து)

* தோமஸ் ஒர்லே (ஜேர்மனி / பேயர்ன் முனிச்).

 

புஸ்காஸ் விருது - 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கோல் விருது

2016 ஆண்டுக்கான சர்வதேச அங்கிகாரம் பெட்ரா  கால்பந்தா தொடரிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கோல்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்படும். முக்கிய சர்வதேச வீரர்கள் பெற்ற கோல்கள் முதல் இடங்களுக்குள் தெரிவாக்கவில்லை.

பிரேஸில் கழகமான கொரிந்தியன்ஸ் கழகத்துக்காக விளையாடி வரும் மார்லன், 17 வயதுக்குப்பட்ட வெனிசுவேலா அணியின் வீராங்கனை டனியுசுகா,  மலேசியா வீரர் மொஹ்ட் பாய்ஸ் சுப்ரி ஆகியவர்களின் கோல்களே இறுதிப்பட்டியலில் தெரிவாகும். மக்கள் வாக்குகளுக்காக இந்த கோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொது ரசிகர்களின் வாக்குகளின் படி எந்த கோல் முதலிடத்தை பெறுகின்றதோ அந்த கோல் 2016 ஆம் ஆண்டின் சிறந்த கோலாக தெரிவாகும். 

https://www.youtube.com/watch?v=gUx5fcCUJzo

https://www.youtube.com/watch?v=qhe_n9Huraw

https://www.youtube.com/watch?v=4lRTLRCuGkE

 

அணி

55 வீரர்களின் பெயர்ப்பட்டியல் அவர்கள் விளையாடும் நிலைகளுக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருந்து இறுதி 11 வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களில் ஒரு கோல் காப்பாளர், 4 பின்வரிசை வீரர்கள், 3 மத்திய வரிசை வீரர்கள், 3 முன் வரிசை வீரர்கள் என இறுதி அணி தெரிவு செய்யப்படும். வாக்களிப்புக்காக இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் தெரிவின் படி ஜனவரி 6 ஆம் திகதி இறுதி அணி அறிவிக்கப்படும்.  

 

கோல் காப்பாளர்  (5):

கிளாடியோ பிராவோ (சிலி /  பார்சிலோனா / மன்செஸ்டர் சிற்றி), ஜிஞ்சலி புபான்  (இத்தாலி / ஜுவ ன்டஸ் ),  டேவிட் டி கியா(ஸ்பெயின் / மன்செஸ்டர் யுனைட்டெட்), கெய்லர் நவாஸ் (கொஸ்டரிக்கா  / றியல் மட்ரிட்) மனுவல் நோயர் (ஜேர்மனி / பெயார்ண் மியூனிச்).

பின்வரிசை வீரர்கள் (20): டேவிட் அலபா (ஒஸ்ரியா / பெயார்ண் மியூனிச்), ஜோர்டி அல்பா (ஸ்பெய்ன் / பார்சிலோனா), சேர்ஜி ஒரியர் (ஐவரி கோஸ்ட் / பரிஸா ஜேர்மா), ஹெக்டர் பெலெரின்  (ஸ்பெய்ன் / ஆர்சனல்), ஜெரோம் பூட்டங் (ஜேர்மனி / பெயார்ண் மியூனிச்) லியனார்டோ பொனூச்சி (இத்தாலி / ஜுவன்டஸ்), டானியல் கர்வஜால் (ஸ்பெய்ன் / றியல் மட்ரிட்), ஜியோர்ஜியோ செலினி (இத்தாலி / ஜுவன்டஸ்), டனி அல்விஸ்  (பிரேஸில் / பார்சிலோனா / ஜுவன்டஸ்), டேவிட் லூயிஸ் (பிரேஸில் / பரிஸா ஜேர்மா / செல்சி), டியகோ கோடின்(உருகுவே / அத்லெட்டிகோ மட்ரிட்), மட்ஸ் ஹம்லெஸ் (ஜேர்மனி / டொர்ட்டமுண்ட் /பெயார்ண் மியூனிச்), பிலிப் லாஹ்ம் (ஜேர்மனி /பெயார்ண் மியூனிச்), மார்ஷலோ (பிரேஸில் / றியல் மட்ரிட்), ஜேவியர் மஷரானோ  (ஆர்ஜென்டீனா / பார்சிலோனா), பெப்பே ​​(போர்த்துக்கல் / றியல் மட்ரிட்), ஜெரார்ட் பீகே (ஸ்பெய்ன் / பார்சிலோனா), சேர்ஜியோ றாமோஸ் (ஸ்பெய்ன் / றியல் மட்ரிட்), தியாகோ சில்வா (பிரேஸில் / பரிஸா ஜேர்மா)  ரபேல் வரானே  (பிரான்ஸ் / றியல் மட்ரிட்).

மத்திய வரிசை வீரர்கள்  (15): ஸ்கெபி‌  அலன்சோ (ஸ்பெய்ன்‌ /பெயார்ண் மியூனிச்), சேர்ஜியோ புஷ்கட்ஸ்  (ஸ்பெய்ன்‌ / பார்சிலோனா), கெவின் டி ப்ருனே  (பெல்ஜியம் / மன்செஸ்டர் சிற்றி), ஈடன் ஹஸார்ட்  (பெல்ஜியம் / செல்சி), அன்றே  இனியஸ்டா (ஸ்பெய்ன்‌ / பார்சிலோனா) , என்கோலோ காண்டே (பிரான்ஸ் / லெய்செஸ்டர் சிற்றி / செல்சி) டொனி க்ரூஸ்  (ஜேர்மனி / றியல் மட்ரிட்), லூக்கா மோட்ரிக்  (குரோஷியா / றியல் மட்ரிட்), மெசுட்  ஏஸில்  (ஜேர்மனி / ஆர்சனல்), டிமிட்ரி பயட் (பிரான்ஸ் / வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்), போல் பொக்பா (பிரான்ஸ் / ஜுவன்டஸ்  / மன்செஸ்டர் யுனைட்டெட்), இவான் ரக்டிக்  (குரோஷியா / பார்சிலோனா), டேவிட் சில்வா (ஸ்பெய்ன்‌ / மன்செஸ்டர் சிற்றி), மார்கோ வெராட்டி  (இத்தாலி / பரிஸா ஜேர்மா)  ஆர்ரோ விடல் (சிலி /பெயார்ண் மியூனிச்).

முன்வரிசை வீரர்கள் , (15): சேர்ஜியோ அக்ரோ  (ஆர்ஜென்டீனா / மன்செஸ்டர் சிற்றி), கரித் பேல் (வேல்ஸ் / றியல் மட்ரிட்), கரீம் பென்ஸீமா (பிரான்ஸ் / றியல் மட்ரிட்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல் / றியல் மட்ரிட்), போலோ டிபாலா (ஆர்ஜென்டீனா / ஜுவன்டஸ்), அந்தோனி கிறீஸ்மன் (பிரான்ஸ் / அத்லெட்டிகோ  மட்ரிட்), கொன்சாலோ ஹியூகைன் (ஆர்ஜென்டீனா / நாப்போலி / ஜுவன்டஸ்), ஸல்ட்டான்  இப்ராஹிமோவிக்  (சுவீடன் / பரிஸா ஜேர்மா / மன்செஸ்டர் யுனைட்டெட்), ரொபேர்ட் லெவன்டோஸ்கி (போலந்து /பெயார்ண் மியூனிச்), லியனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா / பார்சிலோனா) , தோமஸ்  முல்லர் (ஜேர்மனி /பெயார்ண் மியூனிச்), நெய்மர்  (பிரேஸில் / பார்சிலோனா), அலெக்சிஸ் சந்தேஸ் (சிலி / ஆர்சனல்), லூயிஸ் சுவாரஸ் (உருகுவே / பார்சிலோனா), ஜேமி வார்டி (இங்கிலாந்து / லெய்செஸ்டர் சிட்டி)

 

இந்த விருதுகளுடன் சிறந்த பண்பான அணிக்காக விருது வழங்கப்படவுள்ளது. இம்முறை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் சிறந்த ரசிகருக்கான விருதை அறிமுகம் செய்துள்ளது. போட்டிகளில் அல்லது, விருதுகளில், சிறப்பான முறையில் பங்கேற்ற ஒருவர் அல்லது ஒரு குழுவுக்கு இந்த விருது வழங்கப்படும். போட்டிகளின் போது சிறப்பான முறையில் தங்கள் ரசிப்பு தன்மையை வெளிக்காட்டிய ஒரு நபர் அல்லது குழுவுக்கு இந்த விருது கிடைக்கலாம். முன்னாள் வீரர்கள் அடங்கிய ஒரு சிறப்பு குழு இந்த விருதை தெரிவு செய்யவுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .