தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
01-01-2017 12:38 PM
Comments - 0       Views - 161

குளியாப்பிட்டிய – இலுக்ஹேன பிதேசத்தில் இடம்பெற்ற மோதலில் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் அவருடைய வீட்டுக்குள் வைத்து தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் படுகாயமடைந்த நிலையில், குளியாப்பிட்டிய வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இலுக்ஹேன - குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே, உயிரிழந்துள்ளதுடன் குடும்பப் பிரச்சினை காரணமாக  இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் ​கூறினர்.

"தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty