வெளிநாட்டு பிரஜை பலி
05-01-2017 01:11 PM
Comments - 0       Views - 49

காலி, கொஸ்கொட கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவர், நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய தினம் (05), பெண்ணொருவருடன் நீராடச் சென்ற வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த நபரை மீட்ட பிரதேச மக்கள், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம், பிரேதப் பரிசோதனைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

"வெளிநாட்டு பிரஜை பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty