கட்டைக்காடு கடைசி பஸ் சேவை நேரத்தில் மாற்றம்
06-01-2017 03:33 PM
Comments - 0       Views - 9

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைசாலையின் முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.

பின்தங்கிய கிராமமான கட்டைக்காடு கிராமத்துக்கு இதுவரை இறுதி பஸ் மாலை 4 மணிக்கு புறப்பட்டது.

இதனால், அக்கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனையடுத்து, பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் மாலை 6 மணிக்கு, இன்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளது.

"கட்டைக்காடு கடைசி பஸ் சேவை நேரத்தில் மாற்றம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty