யாழ். பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா
06-01-2017 03:33 PM
Comments - 0       Views - 27

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பல்கலைகழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில், யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைகழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு நிகழ்வு தொடர்பான  ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இவ்வருடம் 2151 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். இவர்களில் 164 மாணவர்கள் பட்டப் பின் தகைமை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுவதுடன், 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். வவுனியா வளாகத்திலிருந்து 196 உள்ளக மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதுடன் 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம் பெறவுள்ளனர். இதேவேளை 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம் பெறவுள்ளனர்.

பட்டமளிப்பு நிகழ்வுகளானது இரண்டு தினங்கள் ஒன்பது அமர்வுகளாக நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் முதல் நாள் முதல் அமர்வானது காலை 9 மணிக்கும், 10.30 மணிக்கும், 11.30 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும், 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளன. 

இதேபோன்று இரண்டாம் நாள் அமர்வானது காலை 9 மணிக்கும், 10.30 மணிக்கும்,  பிற்பகல் 1.30 மணிக்கும், 3 மணிக்கும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோர் தொடர்பான விபரங்கள் உட்பட மேலதிக தகவல்களை பெறவிரும்பின் அவர்கள் யாழ்.பல்கலைகழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்' எனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.

"யாழ். பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty