சமாதி அமைக்க முற்பட்டவர்களுக்கு பிணை
07-01-2017 10:42 AM
Comments - 0       Views - 9

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் வியாழக்கிழமை, பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவரை நேற்று, தலா  50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்த  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வழக்கை எதிர்வரும் மாதம் 20ஆம்  திகதிக்கு ஒத்தி வைத்தார்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் வியாழக்கிழமை, பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் மாவீரா்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஈடுப்பட்டிருந்தனர்.
 
இதன்போது கரைச்சி பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன், சம்பவ இடத்துக்குச் சென்று பொதுச் சமாதி அமைக்கும் நிறுத்துமாறு கோரியிருந்தார். ஆனால் ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், ஏற்பாட்டாள்களுடன் சமரசமாக பேசி  வியாிக்கிழமை மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்தப் பின்னார் நேற்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு  கூறியிருந்தனர்..
 
அதனடிப்டையில் நேற்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜரான சந்தேகநபர்களுக்கு   இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இதேவேளை, கனகபுரம் மாவீரா் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்குள் எவரும் உட்பிரவேசிக்காமல் இருப்பதற்கு நீதிமன்றத்திடம் தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸார் கோரியபோது, அதனை  நீதவான் நிராகரித்துவிட்டார்.

"சமாதி அமைக்க முற்பட்டவர்களுக்கு பிணை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty