மன்னாரில் கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு
07-01-2017 12:00 PM
Comments - 0       Views - 10

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு, மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் அனுமதி வழங்கியுள்ள போதும் கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக, கடலட்டை பிடிக்கும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்தொழில் திணைக்களத்தினூடாக அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள போதும், தற்போது இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்குக் கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக, மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தென்கடல் பகுதியில் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மீனவர்கள் சுழியோடிக் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடற்தொழில் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் பெற்று குறித்த தொழிலில் ஈடுபட்டு வரகின்றனர்.

குறித்த கடலட்டை பிடிக்கும் தொழிலானது,  ஒக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 7 மாதங்கள் மாத்திரமே மன்னார் தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏனைய காலங்களில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் கடலுக்குச் சென்று சுழியோடி கடலட்டை பிடிக்கும் மீனவர்களை, இரவு நேரத்தில் செல்ல அனுமதிக்காது பகல் நேரத்தில் குறித்த தொழிலை செய்யக் கடற்படையினர் அனுமதிப்பதாக, மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அனுமதியை வழங்கியுள்ள போதும் கடற்படையினரே அனுமதி மறுத்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"மன்னாரில் கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty