3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து
08-01-2017 05:20 PM
Comments - 0       Views - 27

ஹிக்கடுவ - பத்தேகம வீதியின் நலாகஸ்தெனிய பகுதியில், காரொன்றும் கென்டர் ரக வாகனமொன்றும் வானொன்றும், ஒன்றுடன் ஒன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரும் கென்டர் ரக வாகனமும், பத்தேகம நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கும் போது, முன்னால் பயணித்துக்கொண்டிருந்த கார், பின்னால் வந்துகொண்டிருந்த கென்டர் வாகனத்தில் மோதுண்டு பாதையை விட்டு விலகியதில், எதிரே வந்துகொண்டிருந்த வானில் மோதுண்டுள்ளது.

இந்த விபத்தால் காயமடைந்தவர்களில் கர்ப்பிணியொருவரும் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாகத் தெரிவித்த ஹிக்கடுவ பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty