பேர வாவியிலிருந்து நீர்நிலைப் போக்குவரத்துச் சேவை
08-01-2017 05:26 PM
Comments - 0       Views - 59

கொழும்பு பேர வாவியை மையப்படுத்தி, நீர்நிலைப் போக்குவரத்துச் சேவையொன்றை ஆரம்பிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், பேர வாவியை அண்மித்ததாக வாழ்ந்துவரும் குடிசை வீட்டு மக்களுக்கு, இந்த ஆண்டுக்குள் புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பேர வாவியை அண்மித்த 150 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்து, புதிய வணிக மத்திய நிலையமொன்றை உருவாக்கப்போவதாக, கொழும்பு - மெக்கலம் பூங்காவை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றுகையில், அமைச்சர் மேலும் கூறினார்.

"பேர வாவியிலிருந்து நீர்நிலைப் போக்குவரத்துச் சேவை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty