'கஞ்சா ரொட்டியை கடவுளுக்கு படைத்தோம்'
09-01-2017 09:34 PM
Comments - 0       Views - 271

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு  படைப்பதாகவும் நபரொருவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி  செல்வாநகர்  பகுதியில்  வைத்து  275 கிராம்  கஞ்சாவுடன்  நீர்கொழும்பைச்  சேர்ந்த  முப்பது வயதான  சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை  கைதுசெய்யப்பட்டார்.
அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் ஆஜர் செய்தபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நீதவான், சந்தேகநபரிடம் கேள்வியெழுப்பியபோது, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு முன்னால்  அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும்  சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு  கஞ்சாவில் ரொட்டி சுட்டு  படைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை  சோதனையிட மன்று வழங்கிய உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப்  பொலிஸாரால் கோவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இருப்பினும்  எவ்விதமான  சந்தேகத்திற்குரிய  பொருட்களும்  மீட்கப்படவில்லை என்பதுடன், இது பதிவற்ற ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"'கஞ்சா ரொட்டியை கடவுளுக்கு படைத்தோம்' " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty