மரேயைத் தோற்கடித்து சம்பியனானார் ஜோக்கோவிச்
08-01-2017 09:33 PM
Comments - 0       Views - 8

உலகின் முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய இரண்டாம் நிலை வீரருமான சேர்பியாவின் ஜோக்கோவிச், உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரேயைத் தோற்கடித்து, தனது கட்டார் பகிரங்கத் தொடர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத் தொடர் போட்டிகளில், மரே பெற்று வந்த தொடர்ச்சியான 28 வெற்றிகளுக்கு ஜோக்கோவிச் முடிவு கட்டியுள்ளார்.

இரண்டு மணித்தியாலங்கள் 54 நிமிடங்கள் இடம்பெற்ற போட்டியில், 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில், ஜோக்கோவிச்சிடம் மரே தோல்வியுற்றிருந்தார். இப்போட்டியில் தோல்வியுற்றபோதும், தரவரிசையில் மரேயே முதலாமிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"மரேயைத் தோற்கடித்து சம்பியனானார் ஜோக்கோவிச்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty