பிறிஸ்பேண் தொடர்: சம்பியனானார் டிமிட்ரோவ்
09-01-2017 03:33 PM
Comments - 0       Views - 8

பிறிஸ்பேண் சர்வதேச டென்னிஸ் தொடரில், 5ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியைத் தோற்கடித்த, 17ஆம் நிலை வீராங்கனையான பல்கேரியாவின் கிறிகொர் டிமிட்ரோவ், சம்பியனாகத் தெரிவானார். 25 வயதான டிமிட்ரோவ், கடந்த 2 ஆண்டுகளில் பெற்றுக் கொண்ட முதலாவது சம்பியன் பட்டமாக, இந்தப் பட்டம் அமைந்தது.

முதலாவது செட்டை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய டிமிட்ரோவ், இரண்டாவது செட்டை, அதே புள்ளிகள் கணக்கில் இழந்தார். எனவே, தீர்க்கரமான 3ஆவது செட்டில் இருவரும் போராடுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 6-3 என்ற புள்ளிகள் கணக்கில், டிமிட்ரோவ் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்தத் தடவையோடு, பிறிஸ்பேண் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு 6 தடவைகள் தெரிவாகியுள்ள நிஷிகோரி, அந்த 6 தடவைகளும் தோல்வியடைந்துள்ளார்.

இந்தத் தொடரின் வெற்றிபெற்ற டிமிட்ரோவ், 2 இடங்கள் முன்னேறி, தரப்படுத்தலில் 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2014ஆம் ஆண்டில் 8ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த டிமிட்ரோவ், அதன் பின்னர் ஏற்பட்ட உபாதைகள் காரணமாகவும் மோசமான ஃபோர்ம் காரணமாகவும், பின்னடைவைச் சந்தித்திருந்தார். 2016ஆம் ஆண்டின் முதற்பாதியில் அவர், 40ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால், அதன் பின்னர் முன்னேற்றத்தை அவர் வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

"பிறிஸ்பேண் தொடர்: சம்பியனானார் டிமிட்ரோவ் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty